Theme Check

சென்னையில் 2ஆவது ஆண்டாக களையிழந்த கொண்டாட்டம்.. புத்தாண்டில் காற்று மட்டுமே வீசிய கடற்கரைகள் !

சென்னையில் 2ஆவது ஆண்டாக களையிழந்த கொண்டாட்டம்.. புத்தாண்டில் காற்று மட்டுமே வீசிய கடற்கரைகள் !

சென்னையில் 2ஆவது ஆண்டாக களையிழந்த கொண்டாட்டம்.. புத்தாண்டில் காற்று மட்டுமே வீசிய கடற்கரைகள் !
X

கொரோனா தொற்றால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், சென்னையில் இரண்டாவது ஆண்டாகவும் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த உத்தரவின் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, இரு மாதங்களுக்கு முன்பே நட்சத்திர ஹோட்டல்கள், தனியாா் நிறுவனங்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, அதற்குரிய நுழைவுச் சீட்டுகளை விற்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஒமைக்ரான் எதிரொலியால், அரசு தடை விதித்ததன் காரணமாக நட்சத்திர ஹோட்டல்கள், தனியாா் நிறுவனங்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக நடத்தவில்லை.

best-pub

நள்ளிரவு 12 மணிக்கு பின்னா் அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்படும் என சென்னை காவல்துறை அறிவித்ததினால், சாலைகளில் சொற்ப வாகனங்களையே காண முடிந்தது.

புத்தாண்டையொட்டி, மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை ஆகியப் பகுதிகளில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு புத்தாண்டை கொண்டாடுவர். ஆனால், இந்தாண்டு அரசின் உத்தரவினால் இந்தாண்டு கடற்கரைகளில் காற்று மட்டும் வீசியது. பொதுமக்கள் கடற்கரைக்கு வராமல் இருப்பதற்கு போலீஸாா் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தனர்.

best-pub

மெரீனா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே உள்ள மணிக்கூண்டு மட்டும் வழக்கம்போல வண்ண விளக்குகளாலும், மலா்களாளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எனினும் மணிக்கூண்டு தனியாகவே இருந்தது.

சென்னையின் முக்கிய சாலைகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதிகளில் கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் தடை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுகிா என போலீஸாா் தீவிரமாக கண்காணித்தனா்.

best-pub

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டதினால் பலரும் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றனா். புத்தாண்டையொட்டி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததால், சென்னை களையிழந்து காணப்பட்டது. சென்னையில் கடந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டும் பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது இளைஞா்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.


newstm.in

Next Story
Share it