Theme Check

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அறிவிப்பு.. இந்த படை இந்தியாவை தாக்குப்பிடிக்குமா?

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அறிவிப்பு.. இந்த படை இந்தியாவை தாக்குப்பிடிக்குமா?

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அறிவிப்பு.. இந்த படை இந்தியாவை தாக்குப்பிடிக்குமா?
X

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அதன் பிறகு டி20 போட்டிகள் 16ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் இதில் இங்கிலாந்துக்கு எதிராக 3வது டி20 போட்டியில் 53 பந்துகளில் 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் விளாசிய போவெல் இல்லை என்பது விளையாட்டு ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

pollard

கெமர் ரோச் அணிக்கு திரும்புகிறார். அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர், மிடில்-ஆர்டர் பேட்டர் எங்க்ருமா பானர் மற்றும் தொடக்க வீரர் பிராண்டன் கிங் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

கீரன் பொலார்ட் (கேப்டன்), கிமார் ரோச், எங்க்ருமா பானர், பிராண்டன் கிங், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஸ்மித், ஒடியன் ஷெப்பர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

அதேநேரத்தில், டி20 அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது, ஒருவேளை போவெல் அதில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it