Theme Check

#BIG NEWS:- வேகமா பரவுது ‘வெஸ்ட் நைல் வைரஸ்’.. தமிழகம் முழுவதும் எச்சரிக்கை..!

#BIG NEWS:- வேகமா பரவுது ‘வெஸ்ட் நைல் வைரஸ்’.. தமிழகம் முழுவதும் எச்சரிக்கை..!

#BIG NEWS:- வேகமா பரவுது ‘வெஸ்ட் நைல் வைரஸ்’.. தமிழகம் முழுவதும் எச்சரிக்கை..!
X

கொசுக்கள் மூலம் பரவும் 'வெஸ்ட் நைல் வைரஸ்' காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்கள் குறித்து தெரிவிக்கும்படி பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத் துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'க்யூலெக்ஸ்' என்ற வகை கொசுக்கள் மூலம் 'வெஸ்ட் நைல் வைரஸ்' காய்ச்சல் பரவுகிறது.

இந்த காய்ச்சலுக்கு உயர் சிகிச்சை எடுத்துக் கொள்ளாத பட்சத்தில், நரம்புசார் பிரச்சனை, சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படக்கூடும்.
West Nile Virus Infection Symptoms, Treatment, Definition & Transmission
பொதுவான டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள், நன்னீரில் வளரக் கூடியவை. அதேநேரம், வெஸ்ட் நைல் காய்ச்சலை பரப்பும் 'க்யூலக்ஸ்' கொசுக்கள் அசுத்தமான நீரில் வளரக் கூடியவை.

தற்போது, கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருச்சூரில் 47 வயது நபர் உயிரிழந்துள்ளார். எனவே, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

அதன்படி, அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வகை காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர் விவரங்களை சேகரித்து, பொது சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும்.

சுற்றுப்புறத்தில் கழிவு நீர் தேங்காமல் தூய்மையாக வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, கழிவு நீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it