Theme Check

என்னதான் ஆச்சி நம் பிள்ளைகளுக்கு.. மேஜையை தூக்கி ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் !!

என்னதான் ஆச்சி நம் பிள்ளைகளுக்கு.. மேஜையை தூக்கி ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் !!

என்னதான் ஆச்சி நம் பிள்ளைகளுக்கு.. மேஜையை தூக்கி ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் !!
X

பள்ளியில் பாடம் நடத்தும்போது நடனமாடி ஆசிரியரை மாணவர்கள் தாக்க முயன்ற வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிர்ச்சி அடையும் வகையில் அவ்வப்போது வீடியோக்கள் வெளியாகி வருகிறது. மாணவர்களை தாக்கி படிக்கவைத்த காலம் சென்று, இப்போது ஆசிரியர்களை மாணவ, மாணவிகள் தாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த வகையில் வேலூர், கோவை, நெல்லை, கடலூர், சென்னையைத் தொடர்ந்து கன்னியாகுமரியிலும் அந்த கோரம் நடந்துள்ளது.

school

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைபள்ளி ஒன்றில் கடந்த வியாழன் அன்று மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம் போட்டு ஆசிரியரை தாக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.அப்போது ஒரு மாணவர் வாசலில் நின்று நடனமாடுவதும் வேறு காட்சியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மேஜை மேல் ஏறி நின்று ஆடுவதுமாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக மற்றொரு மாணவர் டெஸ்க்கை தூக்கிக் கொண்டு ஆசிரியரை தாக்க செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

school

மீயூசிக் பின்னணியில் இந்த வீடியோவை யாரோ சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். ஒரு மாணவவனை ஆசிரியர் எச்சரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.


newstm.in

Next Story
Share it