இதென்ன எடப்பாடியாருக்கு வந்த சோதனை.. ஈக்களால் திருமணத்தில் நடந்த அதிர்ச்சி !
இதென்ன எடப்பாடியாருக்கு வந்த சோதனை.. ஈக்களால் திருமணத்தில் நடந்த அதிர்ச்சி !

சேலம் மாவட்ட அதிமுக பொருளாளர் பங்க் வெங்கடாசலத்தின் இல்ல திருமண வரவேற்பு விழா சேலம் - நாமக்கல் சாலையில், ராசிபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு அழையா விருந்தாளிகளாக ஈக்கள் அதிகளவில் குவிந்தன. திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள், மண்டபத்திலிருந்த ஈக்களின் தொல்லையால் கடும் அவதியடைந்தனர்.
குறிப்பாக உணவு அருந்தும் இடங்களில் கூட்டம் கூட்டமாக ஈக்கள் அலைமோதியது. அதேபோல் மண்டபத்தின் வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஈக்கள் சுற்றியதால், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அமரவும் முடியாமல் திணறினர். இந்த திருமண விழாவிற்கு மணமக்களை வாழ்த்துவதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். ஆனால் அவரையும் ஈக்கள் கூட்டம் சுற்றியதால் அதிருப்தி அடைந்தார். இதனால், மணமக்களை வாழ்த்தி விட்டு அதேவேகத்தில் அவர் மண்டபத்தை விட்டு விரைவாக வெளியேறினார்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ஈக்கள் தொல்லையால் விரைவாக மண்டபத்திலிருந்து வெளியேறினர். பெரும் தொகைக்கு வாடகைக்கு எடுத்த ஒரு மிகப்பெரிய திருமண மண்டபத்தில் இப்படி ஈக்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததும், இதனால், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அவதிக்குள்ளானதும் திருமண வீட்டாருக்கும் கவலையை ஏற்படுத்தியது.
ஆனால், இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதால் யார் மீது குறைமுடியாத சூழலும் நிலவியது. அதேநேரத்தில் திருமண மண்டபத்தை சுற்றிலும் கோழிப் பண்ணைகள் இருப்பதால் ஈக்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
newstm.in

