Theme Check

என்னம்மா யோசிக்கிறாங்க உபிஸ்.. ஹைடெக் முறையில் மோசடி.. சிக்கினார் போலீசிடம்..!

என்னம்மா யோசிக்கிறாங்க உபிஸ்.. ஹைடெக் முறையில் மோசடி.. சிக்கினார் போலீசிடம்..!

என்னம்மா யோசிக்கிறாங்க உபிஸ்.. ஹைடெக் முறையில் மோசடி.. சிக்கினார் போலீசிடம்..!
X

உத்தர பிரதேசத்தில் சப் - இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற ஒருவர் காதினுள் மிக நுண்ணிய புளூடூத் கருவியை பொருத்தி, அதை மறைக்க தலையில் விக் அணிந்து தேர்வு அறைக்கு வந்தார்.

மெட்டல் டிடெக்டர் இயந்திரம் அமைந்திருந்த வாசல் வழியே அவர் நுழைந்தபோது எச்சரிக்கை மணி ஒலித்தது. பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை சோதனை செய்த போது ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் ஒருமுறை வாசல் வழியே அனுப்பினர். அப்போது மீண்டும் எச்சரிக்கை மணி ஒலித்தது.

இதையடுத்து அவரை போலீசார் முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அவர் தலையில் 'விக்' வைத்து அதற்குள் புளூ டூத் வயர்லெஸ் கருவியை பொருத்தி தேர்வுக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், புளுடூத் மூலம் வெளியில் உள்ள நண்பர்களிடம் விடைகளை கேட்டு தேர்வெழுத திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த மோசடி 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது.

Next Story
Share it