Theme Check

“இடுப்பு மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்..?” : கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்..!

“இடுப்பு மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்..?” : கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்..!

“இடுப்பு மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்..?” : கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்..!
X

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல்நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிறுவனத்தின் புதிய தலைவராக பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியை, முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்கள் இடுப்பை பற்றி திண்டுக்கல் ஐ.லியோனி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. எனவே, லியோனியை பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்தது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் லியோனியின் நியமனம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில், “தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார்.


பெண்களை இழிவு படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது. மேலும், பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்..? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களைப் படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்..?

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம்... அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Tags:
Next Story
Share it