தந்தை, மகளுக்கு நேர்ந்த கதி.. பெரும் சோகத்தில் மூழ்கிய மக்கள் !!
தந்தை, மகளுக்கு நேர்ந்த கதி.. பெரும் சோகத்தில் மூழ்கிய மக்கள் !!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாம்பாடி பகுதியில் பினீஸ் (45) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்ர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சென்ற பினீஸ் அவரது மகள் பார்வதி (16) ஆகியோர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த மனைவி பலமுறை போன் மூலம் தொடர்பு கொண்டும் போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதைதொடர்ந்து மனைவி பாம்பாடி காவல் நிலையத்தில் கணவனையும் மகளையும் காணவில்லை என புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று இடுக்கி மாவட்டம் கல்லார் குட்டி டேம் அருகில் இவர்களுடைய ஸ்கூட்டர் நின்றுகொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த அணையில் சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறையினர், போலீசார் தேடினர். அப்போது இருவரும் அணையின் ஒரு பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்டார்கள். போலீசார் இவர்களது உடலை மீட்டு இடுக்கி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. மேல் விசாரணை நடத்தி வருவதாக பாம்பாடி போலீசார் தெரிவித்தனர். தந்தை, மகள் தற்கொலை செய்துக்கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

