Theme Check

இனி ராமராக நடித்தால்..? ராம்லீலா நாடகத்தில் ராமராக நடித்த முஸ்லிம் வாலிபருக்கு கொலை மிரட்டல்..!!

இனி ராமராக நடித்தால்..? ராம்லீலா நாடகத்தில் ராமராக நடித்த முஸ்லிம் வாலிபருக்கு கொலை மிரட்டல்..!!

இனி ராமராக நடித்தால்..? ராம்லீலா நாடகத்தில் ராமராக நடித்த முஸ்லிம் வாலிபருக்கு கொலை மிரட்டல்..!!
X

உத்திர பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த 30 வயதான டேனிஷ் என்கிற அந்த நபர் இந்த வருடமும் அதே வேடத்தில் நடித்தால் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மதத்தை சேர்ந்த மற்றொரு நபர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபருக்கும் இவருக்கும் வாடகை பிரச்சினை சம்பந்தமாக மோதல் இருந்துள்ளது. அதனால், இவர் ஏற்று நடிக்கும் இந்து கடவுளின் கதாபாத்திரத்தை வைத்து பிரச்சினையை உருவாக்கலாம் என்னும் நோக்கில் அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த ஆறு ஏழு வருடங்களாகவே இவர் ராமர் வேடத்தில் நடித்து வருகிறார். நாடகக் கலைஞரான இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்து அப்பகுதியில் பெரும் பிரபலமானவர் ஆவார்.

ஒரு முறை பிரச்சினை கொடுத்து வரும் அந்த நபர் கையில் கத்தியுடன் இவரை கொலை செய்யவும் முற்பட்டுள்ளார். சக கலைஞர்களின் உதவியுடன் இவர் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து அந்த நபர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Tags:
Next Story
Share it