தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வர காரணம் என்ன?! மருத்துவர்களின் விளக்கம்!
தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வர காரணம் என்ன?! மருத்துவர்களின் விளக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை பலரும் செலுத்திக் கொண்டு வரும் வேளையிலும் கொரோனா பரவுதல் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்படி கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட உடனே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது.அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. எதிர்ப்பு சக்தி உருவாகக்கூடிய இடைப்பட்ட காலகட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவருக்கு சாதாரண காய்ச்சலாக கொரோனா வந்து போகலாம். கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு 100% தொற்று வராது என அந்த உறுதியும் வழங்கப்படவில்லை. இரண்டு தவணையாக கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் தான் முழு பயன் கிடைக்கும்.
பொதுவாக எந்த வகையான தடுப்பூசிகள் போட்டு கொண்டாலும் சிலருக்கு காய்ச்சல் வருவது வழக்கமானதே. தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 72 மணி நேரத்திற்கு மது அருந்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

