உதயநிதிக்கு நயன்தாராவுக்கும் என்ன உறவு? வெளுத்து வாங்கிய ராதாரவி!
உதயநிதிக்கு நயன்தாராவுக்கும் என்ன உறவு? வெளுத்து வாங்கிய ராதாரவி!

நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விழாவில், நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசினார்.

ராதாவியின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. அப்போது திமுகவில் இருந்த அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டார். தற்போது பிஜேபி கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் சரத்குமார், கமல் குறித்து பேசியது பெரியளவில் சர்ச்சையானது. அதேபோல் எதிர்க்கட்சியினரை ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் அவர், தற்போது மீண்டும் நயன்தாரா பற்றி நான் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். நயன்தாரா பற்றி நான் பேசியதால் என்னை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியது. நான் முழுவதுமாக கட்சியை விட்டு வெளியேறினேன். பெண்ணியம் காப்பாத்துறாங்கன்னு நயன்தாரா பற்றி பேசுனதுக்கு நடவடிக்கை எடுத்தாங்க. ஆனா, அதன் பிறகு யாருமே திமுகவில் பெண்களைப் பற்றி தவறாக பேசுனதேயில்லையா? இல்லை.. நயன்தாராவை மட்டும் தான் பெண்ணாக பார்க்குறாங்களா?

நயன்தாரா யாரு? திமுக கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரா? திமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன உறவு? உதயநிதிக்கும் நயன்தாராவிற்கும் உறவு என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்’ என்று பேசியிருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாகி வருகிறது.

