ரஷியா- உக்ரைன் இருநாட்டு படை பலம் என்ன?
ரஷியா- உக்ரைன் இருநாட்டு படை பலம் என்ன?

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை நாடுகளை அதிர வைத்துள்ளது. ஏனெனில் பொருளாதாரம், எரிவாயு, பெட்ரோல், தங்கம் விலை உயர்வை சந்தித்து வருகின்றன உலக நாடுகள். அதேநேரத்தில், பல நாடுகளும் ரஷ்யா, உக்ரைனுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு வருகின்றன.
இதனால் பேரின் தன்மை மேலும் அதிகரிக்கும் சூழலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரஷ்யாவின் படைப்பலத்துடன், உக்ரைன் பலத்தை ஒப்பீடு செய்தால், வியப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது.

அதாவது, உக்ரைனைவிட ரஷ்யா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமோ அதிகம். ஆனால் ஒன்று, உக்ரைனிடம் இருந்து ரஷ்யாவுக்கு வருகிற ராணுவ சவால் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்.
ரஷ்யப்படை பலம்
ரஷ்யாவின் படையில் 8,50,000 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். 4,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இருக்கின்றன. அதில், 772 போர் விமானங்கள் உள்ளன. அதே போலத் தரைப்படைகளைப் பொறுத்தவரை 12,500 டாங்கிகள், 30,000-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள், 14,000 பீரங்கி துப்பாக்கிகள் ஆகியவற்றை ரஷ்யா வைத்துள்ளது. கடற்படையைப் பொறுத்தவரை ஒரு விமானம் தாங்கி கப்பல் உட்பட 600-க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள், 70 நீர் மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவின் ராணுவப்படையில் உள்ளன.

உக்ரைன் படைபலம்:
உக்ரைன் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2,50,000. ராணுவ விமானத்தைப் பொறுத்தவரை 318 விமானங்கள் இருக்கின்றன. அதில், 69 போர் விமானங்கள் உள்ளன. உக்ரைன் தரைப்படையில் சுமார் 2,600 டாங்கிகள் மற்றும் 12,000 கவச வாகனங்கள் உள்ளன. மேலும், 3,000-க்கும் அதிகமான பீரங்கிகள் உள்ளன. கப்பல் படையில் 38 கப்பல்கள் உள்ளன. நீர்மூழ்கிக் கப்பல் எதுவும் உக்ரைனிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

