ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது ?
ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது ?

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் கருவியில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த கைரேகை பதிவு செயும்போது சில நேரங்களில் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் கியுஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேஷன் பொருட்களை வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story

