Theme Check

காய்ச்சல், சளி, உடல் வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன? - அரசு வெளியிட்ட புதிய வழிமுறைகள் !

காய்ச்சல், சளி, உடல் வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன? - அரசு வெளியிட்ட புதிய வழிமுறைகள் !

காய்ச்சல், சளி, உடல் வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன? - அரசு வெளியிட்ட புதிய வழிமுறைகள் !
X

காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கிறது. தினசரி பாதிப்பு சுமார் பத்தாயிரம் என்ற அளவில் குறைந்த நிலையில், தற்போது தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர்.

அதேபோல், தமிழகத்திலும் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் சுமார் இரண்டாயிரம் பேருக்கு முந்தைய நாளைவிட கூடுதலாக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

corona

இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுதிணறல், உடல்வலி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு அறிகுறி இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் பரிசொதனை செய்து கொள்ள வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it