எதுக்கு கவலை? இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமாம்!

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பெரிய சந்தேகம் தங்கள் ஆண் உறுப்பு போதுமான வளர்ச்சி பெற்றிருக்கிறதா என்பதுதான். முதலில், ஆண் உறுப்பு என்பது இன்பத்துக்கானது இல்லை. அது அவனுடைய சந்ததி உருவாக்கும் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு உறுப்பு அவ்வளவுதான்.

எதுக்கு கவலை? இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமாம்!
X

பாலாஜிக்கு விரைவில் கல்யாணம் ஆகப்போகிறது. வரப்போகும் மனைவியை திருப்திப்படுத்த முடியாதோ என்ற பயம் அவனுக்குள் ஏற்பட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க இந்த பயம் குற்ற உணர்ச்சியாக மாறியது. உண்மையில் இரண்டு அங்குளம் அளவுக்கு ஆண் உறுப்பு இருந்தாலே போதும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பெரிய சந்தேகம் தங்கள் ஆண் உறுப்பு போதுமான வளர்ச்சி பெற்றிருக்கிறதா என்பதுதான். முதலில், ஆண் உறுப்பு என்பது இன்பத்துக்கானது இல்லை. அது அவனுடைய சந்ததி உருவாக்கும் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு உறுப்பு அவ்வளவுதான்.

கைரேகை எப்படி ஒன்றாக இருக்க முடியாதோ, அதேபோல் ஆண் உறுப்பின் நீளமும் தடிமனும் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு உறுப்பு என்று சொல்லியிருந்தேன். அதன் கடமை, விந்து அணுக்களை பெண்ணின் கருப்பைக்கு கொண்டு சேர்க்க, பெண்ணின் பிறப்பு உறுப்புக்கள் விந்து அணுக்களை செலுத்தும் வேலை. இதற்கு, இரண்டு அங்கும் நீளம் இருந்தாலேபோதும்.

பொதுவாக, விரைப்பு அடைவதற்கு முன்பு எந்த அளவில் இருந்தாலும் அதுபற்றி கவலை இல்லை. விரைப்புத்தன்மை அடைந்த பிறகு இரண்டு அங்குலத்துக்கு மேல் இருந்தாலே போதும் என்கின்றனர் இனப்பெருக்க மண்டல நிபுணர்கள். பொதுவாக, ஆணுக்கு விரைப்புத்தன்மையின்போது நான்கரை முதல் ஐந்தரை அங்குளம் அளவுக்கு ஆண் உறுப்பு நீளுகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.

பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் முதல் இரண்டு அங்குலத்தில்தான் உணர்வுகளைத் தூண்டும் நரம்பு முடிச்சுகள் இருக்கின்றன. எனவே, இதைப் பற்றி கவலைப்படாமல், சந்தோஷமாக இருக்கும் வழியைப் பாருங்கள்.

newstm.in

Tags:
Next Story
Share it