அடுத்து என்ன? - தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மாநிலங்களவையும் ஒப்புதல் !
அடுத்து என்ன? - தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மாநிலங்களவையும் ஒப்புதல் !

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய ஏழு பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.
இதை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலோட் நேற்று அறிமுகம் செய்தநிலையில், அ.தி.மு.க உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே உள்ளிட்டோர் இதன் மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.

அதன் பின் இந்த மசோதா எதிர்ப்பு ஏதுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஏற்கனவே மக்களவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் இந்த மசோதா விரைவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மத்திய அரசு அரசிதழில் இதனை வெளியிடும்.
newstm.in

