Theme Check

வாட்ஸ்அப் குரூப்களுக்கு தடை.. இந்திய ராணுவமே நடவடிக்கை !!

வாட்ஸ்அப் குரூப்களுக்கு தடை.. இந்திய ராணுவமே நடவடிக்கை !!

வாட்ஸ்அப் குரூப்களுக்கு தடை.. இந்திய ராணுவமே நடவடிக்கை !!
X

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. இந்த போராட்டம் மற்றும் வன்முறைக்கு பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.

ஏனெனில், போராட்டத்தின்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் வன்முறை வெடித்தது. ரயில்களுக்கு தீவைத்த எரிக்கப்பட்டதால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, விசாரணையில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்துக்கு தவறான வதந்தியும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதாவது, அக்னிபத் திட்டம் குறித்து வாட்ஸ்அப்களில் தவறான தகவல்கள் பரப்பியதாக கருதப்படுகிறது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

dfg

அக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய சமூக ஊடக கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்த நடவடிக்கை தொடரும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஏற்கனவே போராட்டம், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு வாய்ப்பு அளிக்கப்படாது என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in


Tags:
Next Story
Share it