Theme Check

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது?: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் !!

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது?: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் !!

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது?: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் !!
X

தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுக, அதிமுக என அனைத்துக்கட்சியினரும், சுயேச்சைகளும் போட்டிப்போட்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது மக்களிடம் பேசிய அவர், பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை. 2005ஆம் ஆண்டு மாநாட்டிற்காக திண்டுக்கல்லுக்கு வந்ததை மறக்க முடியாது என்று கூறினார்.

money

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும். வாக்குறுதி தந்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். வாக்குறுதி அளித்தால் ஏமாற்றமாட்டேன். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கஜானாவை காலி செய்துள்ளனர். தற்போது தமிழக அரசின் நிதிநிலையை சீரமைத்து வருகிறோம், என்று கூறினார்.

ஆயிரம் ரூபாய் வழங்காதது குறித்து அதிமுகவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.


newstm.in

Next Story
Share it