தெலுங்கு பிக்பாஸ் செப்டம்பரில்- தமிழில் எப்போது..?

தெலுங்கு பிக்பாஸ் செப்டம்பரில்- தமிழில் எப்போது..?

தெலுங்கு பிக்பாஸ் செப்டம்பரில்- தமிழில் எப்போது..?
X

கடந்த 2017-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, ஆகிய இரண்டு மொழிகளில் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்களும் பெரியளவில் வெற்றி பெற்றன.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூனில் துவங்கப்பட்டு அக்டோபரில் முடிவடைவது வழக்கம். கொரோனா பிரச்னையாக் கடந்த நான்காவது சீசன் 2020 செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டாவது அலையும் துவங்கியது. அதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் இந்தாண்டு செப்டம்பரில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் செப்டம்பர் முதல் அதற்கான ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அட்வான்ஸ் வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை நிகழ்ச்சி ஏன் துவங்கப்படாமல் இருக்கிறது என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:
Next Story
Share it