Theme Check

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்..!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்..!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்..!
X

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் நத்தம் விசுவநாதன் வெற்றி பெற்றார். இந்நிலையில், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.

அப்போது பத்திரிக்கையாளார்களுக்கு பேட்டி அளித்த நத்தம் விசுவநாதன், “தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் வெட்டுக்கு காரணம் மின்துறை அமைச்சருக்கு அத்துறையைப் பற்றி முழுமையாக புரிதல் இல்லாததுதான். மின்வெட்டை தீர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டும் வந்துவிடும்.

‘திருவிளையாடல்’ திரைபடத்தில் நாகேஷ் கூறுவதுபோல் ‘பிரிக்க முடியாதது எது..? என்பதுபோல் திமுகவும் மின்வெட்டும்தான். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து மின்வெட்டும் வந்துவிடும், இது ஒரு ராசி. தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பராமரிப்புகளை நான்கு தினங்களில் சரிசெய்துவிடலாம். ஆனால் இப்போது திமுக ஆட்சி சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் முன்பு திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது போல அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

மின்வெட்டுக்கு இன்றைய ஆட்சியில் அற்ப சொற்ப காரணங்களை கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் திமுகவையும் அராஜகத்தையும் பிரிக்க முடியாது. திமுகவிற்கு என ஒரு கலாச்சாரம் உள்ளது, அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் என இருக்கும்.

நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு அதிமுக எடுத்த யுக்திகளும் வியூகங்களுமே காரணம். அது, திமுகவுக்கு சாதகமாக மாறி விட்டது. அதிமுகவை மக்கள் வெறுத்து ஒதுக்கவும் இல்லை; திமுகவை விரும்பி ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்தே. தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி எறிந்தனர். ஆனால் தமிழகத்தில் சில கோரிக்கைகள் நிறைவேற்றி இருப்பதாகவும் முக்கியமான கோரிக்கையான பெண்களுக்கு நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் ஆகியவை ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.

கூட்டுறவுத் துறையில் 5 பவுன் நகை தள்ளுபடி மற்றும் நீட் தேர்வு ரத்து பற்றியும் எவ்வித அறிவிப்பும் இல்லை. நீட் தேர்வில் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு மாணவர்களின் வருங்கால வாழ்க்கையில் சூன்யமான, ஆபத்தான போக்கை கையாள்கிறது” என்று தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it