Theme Check

முதல்வர் டிஸ்சார்ஜ் எப்போது..?: மருத்துவமனை அறிக்கை முழு விவரம்..!

முதல்வர் டிஸ்சார்ஜ் எப்போது..?: மருத்துவமனை அறிக்கை முழு விவரம்..!

முதல்வர் டிஸ்சார்ஜ் எப்போது..?: மருத்துவமனை அறிக்கை முழு விவரம்..!
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சோர்வடைந்ததையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், ஸ்கேன் செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு நேற்று சென்றார்.

அங்கு, அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தினர். இதையடுத்து ஸ்டாலின் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குறித்து சென்னை காவிரி மருத்துவமனை நிர்வாகம் இன்று (15-ம் தேதி) மதியம் 12.30 மணி அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘முதல்வர் ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட சோதனைகள் முடிவடைந்து விட்டது. அவருடைய உடல்நிலை தேறி வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

மேலும், அவர் முற்றிலுமாக கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கொரானாவிலிருந்து குணமடைந்து வருகிறார் – மேலும் ஓய்வு தேவை!  காவேரி மருத்துவமனை அறிக்கை – www.patrikai.com

Next Story
Share it