சமூக நீதி எங்கே..? - கேட்கிறார் வானதி சீனிவாசன் !!
சமூக நீதி எங்கே..? - கேட்கிறார் வானதி சீனிவாசன் !!

தமிழக 16வது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநரின் உரையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட், உழவர் சந்தைகள் மீண்டும் செயல்படுத்தப்படும், நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணர் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனைக்குழுவில் ரிசர்வ் வங்கியில் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லா, அரவிந்த் சுப்ரமணியன், ஜூன் ட்ரெஸ் மற்றும் டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிபுணர்கள் குழுவிற்கு ரகுராம் ராஜன் தலைமை வகிக்க உள்ளார்.
தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில்
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 21, 2021
" சமூக நீதி " எங்கே?? @CMOTamilnadu @mkstalin @arivalayam pic.twitter.com/q7n9frWQRT
இவர்களின் பரிந்துரைகள் மாநில வளர்ச்சிக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் சமூக நீதி எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வானதி சீனிவாசனின் கேள்விக்கு, அவரது ட்விட்டர் பக்கத்தில் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் வானதி சீனிவாசனுக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

