Theme Check

எந்த வயதினருக்கு எந்த கொரோனா தடுப்பூசி? - தமிழக அரசு விளக்கம் !!

எந்த வயதினருக்கு எந்த கொரோனா தடுப்பூசி? - தமிழக அரசு விளக்கம் !!

எந்த வயதினருக்கு எந்த கொரோனா தடுப்பூசி? - தமிழக அரசு விளக்கம் !!
X

எந்த வயதினர், எந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடும் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், திடீரென தினசரி பாதிப்பு அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு அதிகப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா குறைந்ததால் மக்கள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்தது. இதே நிலை தமிழ்நாட்டிலும் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சரே கூறியிருந்தார்.

மக்கள் பயன்பாட்டுக்காக தற்போது பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பிட்ட வயதினருக்கு இந்தத் தடுப்பூசியை மட்டும்தான் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் எந்த வயதினருக்கு எந்த தடுப்பூசி செலுத்தலாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநயாகம் விளக்கம் அளித்துள்ளார்.

vaccine

இது தொடர்பாக அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

  • 12 - 17 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் "கோவோவேக்ஸ்' தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
  • 12 - 17 வயது உடையவர்கள், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
  • 15 - 17 வயது உடையவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

vaccine

  • ஸ்புட்னிக்வி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
  • 18 - 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படாது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் 18 - 59 வயதுக்குட்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

newstm.in

Next Story
Share it