Theme Check

வாக்கு எண்ணும் மையத்திற்குள் கணிணி வல்லுனர்களை அனுமதித்தது யார்? வேல்முருகனின் அடுக்கடுக்கான கேள்விகள்!!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் கணிணி வல்லுனர்களை அனுமதித்தது யார்? வேல்முருகனின் அடுக்கடுக்கான கேள்விகள்!!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் கணிணி வல்லுனர்களை அனுமதித்தது யார்? வேல்முருகனின் அடுக்கடுக்கான கேள்விகள்!!
X

வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே உள்ளே அறையில் கணிணி நிபுணர்களை அனுமதித்ததற்கு என்ன காரணம்? அவர்களை அனுப்பியது யார்? எந்த அடிப்படையில் என்னுடைய அனுமதி இல்லாமல் அவர்களுக்கு பாஸ் வழங்கியது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள தி,வேல்முருகன் செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டார். பண்ருட்டி தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ஆளுங்கட்சிக்கு ஆதரவான உயரதிகாரிகள் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டினார்.

இதுகுறித்துப் பேசிய அவர், “பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் பண்ருட்டி வளாகத்தில் கணினி நிபுணர்கள் 3 பேருக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டுளது. இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தோம்.

இணைய வழி கல்விக்காக மடிக்கணினியுடன் 3 பேருக்கு அனுமதி அளித்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் எங்கும் இணைய வழி வகுப்புகள் நடத்தப்படவில்லை. இதற்கு அனுமதி அளித்தது யார் எனத் தெரிவிக்க வேண்டும்.

தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஆதரவான காவல்துறை உயரதிகாரிகளும் முறைகேடு செய்கின்றனர்.

ராக்கெட்டுகளை இங்கே இருந்து கணிணி மூலம் கட்டுப்பாடு செய்ய முடியும் போதும், வாக்கு எந்திரங்கள் அறைக்கு அருகே உள்ள அறையில் இருந்து கணிணி மூலம் ஏன் மோசடி செய்ய முடியாது. இதை இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்க வேண்டும். காவல்துறை நபர்கள் என்னுடைய வாக்குப்பெட்டிகள் உள்ள அறைக்கு வந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it