வேலுநாச்சியாரை நிராகரிக்க நீங்கள் யார்?.. மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து காட்டமான கேள்வி !!
வேலுநாச்சியாரை நிராகரிக்க நீங்கள் யார்?.. மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து காட்டமான கேள்வி !!

வேலுநாச்சியாரையும், வஉசியையும் நிராகரித்து விட்டு கோட்சேக்களுக்கும், கோல்வார்கர்களுக்கும் அனுமதியா என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் காட்டமாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்டுதோறும் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு பிரமாண்டமான முறையில் நடைபெறும். அனைத்து மாநிலங்கள் சார்பிலும் அலங்கார ஊர்த்திகள் இதில் இடம்பெறும்.

அந்த வகையில், இந்தாண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிப்பு என தெரிய வந்துள்ளது.
இதற்கு மத்திய அரசு கூறிய காரணமும் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வ.உ.சி., வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக்கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ.உ.சியும், மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார்? குடியரசுதின விழாவில் இதையெல்லாம் எடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர்
கோட்சோக்களையும் - கோல்வார்க்கர்களையுமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ உ சி யும் , மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார் ?
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 17, 2022
குடியரசுதின விழாவில் இதையெல்லாம் விடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர் !
கோட்சோக்களையும் - கோல்வார்க்கர்களையுமா ? #Republicday pic.twitter.com/fRDFnopJN8
newstm.in

