பொது செயலாளர் பதவிக்கு யார் போட்டியிட முடியும்..? புதிய விதிகள் என்னென்ன ?
பொது செயலாளர் பதவிக்கு யார் போட்டியிட முடியும்..? புதிய விதிகள் என்னென்ன ?

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்.
- இந்தத் தேர்தலில் கலந்துகொள்ள, 10 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும்.
- தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளின் பணியாற்றி இருக்க வேண்டும்
- போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.
- மாவட்டச் செயலாளர் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும்
- இந்த தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம்
- துணைச் பொதுச் செயலாளகளை பொதுச் செயலாளர் நியமனம் செய்வார்.
Next Story

