குரூப் கேப்டன் வருண் சிங் யார்? இத்தனை திறமை உள்ளவரா !! இந்தியாவே எதிர்பார்ப்பு..
குரூப் கேப்டன் வருண் சிங் யார்? இத்தனை திறமை உள்ளவரா !! இந்தியாவே எதிர்பார்ப்பு..

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். குன்னூர் அருகேயுள்ள காட்டேரி வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அவர் மட்டும் உயிர் பிழைத்தார். ஆனால் உடலில் 80 சதவிகிதம் தீக்காயம் உள்ளதால் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது பின்னணி தகவல்களை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை திறமையான வீரர் இன்று தீவிர சிகிச்சையில் உள்ளார் என இந்தியாவே கண்ணீர் சிந்துகிறது. ஓராண்டிற்கு முன்பு விபத்தில் சிக்க வேண்டிய விமானத்தை சாதுரியமாக செயல்பட்டு பத்திரமாக தரை இறக்கியவர் தான் இந்த குரூப் கேப்டன் வருண் சிங். உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த வருண் சிங் விங் கமாண்டராக இருந்து அண்மையில் தான் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தேஜஸ் விமான சோதனையின் போது வருண் சிங் பெரும் விபத்து ஒன்றில் சிக்க நேர்ந்தது. சுமார் 10,000 அடி உயரத்தில் இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் வருண் சிங் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தது. உடனடியாக சாதுரியமாக விமானத்தை மெதுவாக கீழ் தாழ்வாக பறக்க செய்தார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை விமானம் முழுமையாக இழந்தது. விமானம் விழுந்தால் வருண் சிங்கின் உயிர்க்கு மட்டுமின்றி, பொதுமக்கள் சொத்துகளும் பெரும் அழிவு ஏற்பட வாய்ப்பிருந்தது.

ஆனால், வருண் சிங் பதற்றமின்றி விமானத்தை பத்திரமாக தரை இறக்குவதற்கான அனைத்து வழிகளையும் கையாண்டார். இதன் பலனாக தேஜஸ் போர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கி வெற்றியும் கண்டார். அவருக்கும் காயம் ஏற்படவில்லை எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இவரது இந்த திறமையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு சவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், தற்போது கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் வருண் சிங் விரைந்து குணமடைய வேண்டுமென சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பல்வேறு தலைப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in

