தூண்டி விடுவது யார்.. உடனே கண்காணிங்க.. உளவு அமைப்புகளுக்கு உத்தரவு..!
தூண்டி விடுவது யார்.. உடனே கண்காணிங்க.. உளவு அமைப்புகளுக்கு உத்தரவு..!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைப்பு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற அசம்பாவித சம்பவங்களுடன் போராட்டங்கள் நடக்கின்றன.
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை தொடங்கியுள்ளன. அதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை, தமிழக அரசை உஷார்படுத்தியது.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படத் தொடங்கும் நிலையில், மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டும் அமைப்பின் தலைவர்களை, மாநில உளவுத்துறை, கியூ பிரிவு போலீசார் கண்காணிக்கின்றனர்.
மேலும், தமிழக போலீசில் விடுப்பில் சென்றவர்களை உடனே பணிக்கு திரும்ப நேற்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாசல்களில் 'மப்டி'யில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து உளவுத்துறை டிஎஸ்பிக்கள் கூறுகையில், ‘மத்திய உளவுத்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அமைப்புகளின் நிர்வாகிகளை கண்காணிக்கிறோம். தேவைப்பட்டால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தனர்.

