அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவரா! இப்போதே விருப்பம் தெரிவித்த மக்கள் !!
அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவரா! இப்போதே விருப்பம் தெரிவித்த மக்கள் !!

உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் தி ராக் என அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன். WWE மூலம் ஏற்கனவே சிறியவர்கள் மூலம் பிரபலமானார். சினிமா திரைப்பிரபலங்கள் அரசியலுக்கு வருவது அனைத்து நாட்டிலும் உள்ளது. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கு இல்லை. நடிகர்களாக, தயாரிப்பாளர்களாக, இயக்குனர்களாக இருந்த பலரும் அமெரிக்க சென்ட் உறுப்பினர்களாகவும், மேயர்களாகவும் ஆகியுள்ளனர்.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடித்து பிறகு அரசியலில் நுழைந்து அதிபரானவர் ரொனால்டு ரீகன். நாம் அனைவரும் அறிந்த அர்னால்டு கலிபோர்னிய மேயராக இருமுறை தேர்வு செய்யப்பட்டார். இந்த வரிசையில் அமெரிக்க மக்களின் அடுத்தக்குறி தி ராக் என அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன். ஆனால் சென்ட் உறுப்பினராகவோ, மேயராகவோ இல்லை.. நேராக அமெரிக்கா அதிபர் தான். சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 46 சதவீத மக்கள் ட்வைன் ஜான்சன் அமெரிக்க அதிபராக வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

இதற்கு அவரும் பதிலளித்துள்ளார். அதில், எனது நாட்டை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த நாடு எனக்கு நிறைய தந்திருக்கிறது. அரசியலுக்கு வருவேனா எனத் தெரியாது. ஆனால், இது மக்களின் விருப்பத்தை அடக்கத்துடனும் மரியாதையுடனும் கேட்க வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.

தொழில்முறை மல்யுத்த வீரராக இருந்து, சினிமாவுக்கு வந்தவர் ட்வைன் ஜான்சன். அவரது உடற்கட்டு இன்றளவும் ரசிகர்களால் வியக்கப்படுகிறது. அங்கிருந்து சினிமாவுக்கு வந்த அவர் தி மம்மி ரிட்டர்ன்ஸ் படத்தில் வில்லன் ஸ்கார்ப்பியன் கிங்காக நடித்தார். ஆனால் அடுத்து வந்த தி ஸ்கார்ப்பியன் கிங்கில் பாசிட்டிவ் ரோல் நடித்து ஆக்சன் அவதாரம் எடுத்தார்.
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் சீரிஸ், ஜர்னி 2 - தி மிஸ்டீரியஸ் ஐலெண்ட், ஹெர்குலிஸ், சான் ஆன்ட்ரஸ், ஜுமான்ஜி - வெல்கம் டு தி ஜங்கிள், ராம்பேஜ் போன்ற படங்கள் ஹாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தின. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக ஆதரவு பெற்றுள்ளார்.
newstm.in

