Theme Check

யார் இந்த சீமா புனியா? இந்திய மக்களின் நம்பிக்கை பெற்றார் !!

யார் இந்த சீமா புனியா? இந்திய மக்களின் நம்பிக்கை பெற்றார் !!

யார் இந்த சீமா புனியா? இந்திய மக்களின் நம்பிக்கை பெற்றார் !!
X

இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜப்பானின் டோக்கியோவில் விரைவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்களை தயார் செய்யப்பட்டு வருகின்றன.

பஞ்சாபில் நடைபெறும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் சீமா புனியா 63.70 மீட்டா் தூரம் வட்டு எறிந்து தங்கப் பதக்கம் வென்றாா். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கான வட்டு எறிதல் அளவு 63.50 மீட்டா் ஆகும். இந்த வெற்றியின் மூலம் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

சீமா புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது இது 4-ஆவது முறை. முன்னதாக 2004, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் அவா் பங்கேற்றிருந்தாா். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுள்ள 2-ஆவது இந்திய தடகள வீராங்கனை சீமா புனியா ஆவாா்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த இந்திய கிராண்ட் பிரீ 4 தடகள போட்டியில் கமல்பிரீத் கௌா் 66.59 மீட்டா் தூரம் வட்டு எறிந்து ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றாா்.


newstm.in

Tags:
Next Story
Share it