Theme Check

ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வெல்லப்போவது யார் தெரியுமா? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !!

ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வெல்லப்போவது யார் தெரியுமா? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !!

ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வெல்லப்போவது யார் தெரியுமா? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !!
X

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தினால் அதில் கொரோனா தான் அதிக தங்கம் வெல்லும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் போட்டி ஒலிம்பிக். டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதற்காக பல்வேறு நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அங்கு சென்று முகாமிட்டுள்ளனர். ஆனால் இதுவரை இல்லாத புதிய கட்டுப்பாடுகளுடன் இந்தாண்டு ஒலிம்பிக் நடைபெறவுள்ளது. இதற்கு காரணம் கொரோனா.

இதனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் அனைவரும் முகக்கவசம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டி தொடர்பாக ஆரம்பம் முதலே நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் என்று அனைவருக்குமான, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்து 70 பக்க ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது என்கிறது ஒலிம்பிக் கமிட்டி. ஆனால், மருத்துவக் குழுவில் உள்ள அமெரிக்க நிபுணர்கள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் “வெறும் பேச்சுத்தான், செயலில் ஒன்றுமில்லை” என்று சாடியுள்ளனர்.

நியூயார்க் பல்கலைக் கழகத்தின் பயோ எதிக்ஸ் பேராசிரியர் ஆர்தர் கப்லான் கூறும்போது, உலகம் முழுவதிலிருமிருந்து வீரர்கள் வந்து விளையாட வேண்டும், ஆனால் கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை என்பது பைத்தியக்காரத் தனமாகும். ரிஸ்க் அதிகம் எனும்போது கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு விட்டு விடுவது அபாயகரமானதாகும்.

அதேபோல் வீரர்களை விட கொரோனா தான் இந்தாண்டு அதிக மொத்தத்தில் நிபுணர்கள் குழு ஐ.ஓ.சி. மீது கடும் விமர்சனங்களை வைத்து ஒலிம்பிக் போட்டிகளில் கோவிட் தான் தங்கம் வெல்லும் போலும் என்று எச்சரித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it