Theme Check

இன்று முதல் ஒருநாள் போட்டி.. ரோகித் சர்மாவுடன் ஓபனிங் யார்?

இன்று முதல் ஒருநாள் போட்டி.. ரோகித் சர்மாவுடன் ஓபனிங் யார்?

இன்று முதல் ஒருநாள் போட்டி.. ரோகித் சர்மாவுடன் ஓபனிங் யார்?
X

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த டெஸ்ட் தொடரை 3க்கு 1, டி-20 தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்த நிலையில் இன்றுமுதல் ஒருநாள் போட்டி தொடர் தொடங்குகிறது. புனேயில் உள்ள மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மாவுடன் ஷிகர் தவான் இறங்குவார் என்று விராட் கோலி உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக கோலி கூறியதாவது: இரண்டு விஷயங்களை நாங்கள் கூர்ந்து கவனிக்கப் போவதாக எங்களுக்குள் விவாதித்துக் கொண்டோம். தொடக்கத்தைப் பொறுத்தவரை ஷிகர் தவான், ரோகித் இறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரமாதமாக ஆடிவருகின்றனர்.

மேலும் ஒருநாள் போட்டிக்கான அணியில் சிலபல இளம் வீரர்களும் வாய்ப்பு பெற காத்திருக்கின்றனர். ஒரு தனிப்பட்ட வீரர் (ராகுல்) பார்மில் இல்லை என்றால் அவர் விளையாடுவதை மறந்து விட்டார் என்று அர்த்தமல்ல. மனரீதியான தெளிவு இல்லாமல் இருந்திருக்கலாம். அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும். இது எளிமையான ஒரு ஆட்டம், பந்தை நன்றாக உற்றுக்கவனி அடி அவ்வளவுதான். அந்தக் கணத்தில் இருக்க வேண்டும் மற்றவையெல்லாம் வெளியில் பேசப்படுவதுதான். ராகுல் பார்ம் பற்றி பேசுவதெல்லாம் முற்றிலும் பொருளற்றவை.

இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த், ராகுல், குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், டி.நடராஜன்.

இங்கிலாந்து: ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், மோர்கன், பட்லர், சாம் பிலிங்ஸ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், டாம் கரன், ஆதில் ரஷீத், ரீசி டாப்லி, மார்க் உட்.

newstm.in

Tags:
Next Story
Share it