Theme Check

இன்று கடைசி போட்டி - ஒருநாள் தொடரை வெல்வது யார்?

இன்று கடைசி போட்டி - ஒருநாள் தொடரை வெல்வது யார்?

இன்று கடைசி போட்டி - ஒருநாள் தொடரை வெல்வது யார்?
X

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடர், 20 ஓவர் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் ஒரு நாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட், 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இந்தியா இருக்கிறது. அதே நேரத்தில் ஆறுதலுக்காக ஒருநாள் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

பேட்டிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி பந்துவீச்சில் பலவீனத்துடன் காணப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு யுவேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் நேற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். தொடக்க வீரர் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it