Theme Check

யார் செய்த வேலை இது? - மாஃபிங் புகைப்படத்தால் அஸ்வின் மனைவி கேள்வி !!

யார் செய்த வேலை இது? - மாஃபிங் புகைப்படத்தால் அஸ்வின் மனைவி கேள்வி !!

யார் செய்த வேலை இது? - மாஃபிங் புகைப்படத்தால் அஸ்வின் மனைவி கேள்வி !!
X

ரவிசந்திரன் அஸ்வினின் மாஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு யார் செய்த வேலை இது? என்று அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் வெற்றிக்கு தமிழக வீரர் அஸ்வின் பெரிதும் உதவியாக இருந்தார். முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டை வீழ்த்திய அவர், 2ஆவது இன்னிங்ஸில் சதம் விளாசினார்.

இந்நிலையில் ரவிசந்திரன் அஸ்வினின் மனைவி ரசிகர்களிடம் ட்விட்டரில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். மாஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டு, யார் செய்த வேலை இது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தின் நடிகர் விஜய் வாயில் விரல் வைத்து 'உஷ்' என்பது போல் கொடுத்திருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த போஸ்டரில் விஜய்யின் புகைப்படத்திற்கு பதிலாக அஸ்வின் புகைப்படத்தை மாற்றி வைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it