“ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” : டி.ஆர்.பாலு காட்டம்!!
“ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” : டி.ஆர்.பாலு காட்டம்!!

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று அறிஞர் அண்ணா அன்றே கேட்டார் என டி.ஆர்.பாலு மக்களவையில் பேசினார்.
தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த விவகாரம் மக்களவையிலும் எதிரொலித்துள்ளது.
தமிழகத்தின் உரிமையை பறிக்காதீர்கள் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.

தமிழ ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவையில் முழக்கமிட்டனர். முன்னதாக பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு,'தமிழக கட்சிகள் மட்டுமின்றி, மக்களும் கூட நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆளுநர் தமிழகத்தில் இருந்து என்ன பயன் என்றார்.

மக்களின் கோரிக்கைகளை மதிக்காத ஆளுநர் ஏதற்கு என்ற கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு, அண்ணாவின் நினைவு நாளில் அவர் கூறியதை நினைவுகூற விளைகிறேன். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன் என்று அறிஞர் அண்ணா அன்றே கேட்டார்.
அதே நிலை தான் இப்போதும் உள்ளது. ஆளுநரின் இந்த செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
newstm.in

