Theme Check

என் காதலனுடன் ஏன் பேசுகிறாய்..?: நடுரோட்டில் மாணவிகள் குடுமிப்பிடி..!

என் காதலனுடன் ஏன் பேசுகிறாய்..?: நடுரோட்டில் மாணவிகள் குடுமிப்பிடி..!

என் காதலனுடன் ஏன் பேசுகிறாய்..?: நடுரோட்டில் மாணவிகள் குடுமிப்பிடி..!
X

சென்னையில் நேற்று, காதல் விவகாரம் தொடர்பாக தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் நடுரோட்டில் தலைமுடியைப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் நேற்று (5-ம் தேதி) மதியம் அதே பகுதியில் உள்ள பிரபல கல்லூரியின் மாணவ - மாணவிகள் பேருந்து ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, மாணவி ஒருவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம், ‘என்னுடைய காதலனுடன் ஏன் பேசுகிறாய்..?’ எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
College Girls Fight at busy Road in Chennai Anna Nagar || சென்னை: தலை  முடியை பிடித்து கொண்டு நடுரோட்டில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள்
ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து தாக்கி கொண்டனர். மாணவிகள் அடித்துக் கொள்வதை அருகிலிருந்த மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தியது. ஆனால், சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் குடும்ப நலன் கருதி, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

Next Story
Share it