கணவரை பிரிந்தது ஏன்..? : காரணம் சொல்கிறார் பிரபல நடிகை..!
கணவரை பிரிந்தது ஏன்..? : காரணம் சொல்கிறார் பிரபல நடிகை..!

ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தில் நடித்து மூலம் பிரபலமானவர் க்ரித்தி கில்ஹாரி. தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் நடந்ததே பலருக்கு தெரியாது. இந்நிலையில், கணவர் சாஹில் சேகலை பிரிந்துவிட்டார் க்ரித்தி.
இதுகுறித்து க்ரித்தி கில்ஹாரி கூறியிருப்பதாவது; “கணவரை பிரியக்கூடாது என்பதற்காக நான் நிறைய முயற்சி செய்தேன்.அது அனைத்தும் தோல்வி அடைந்ததால், பிரிவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்த திருமணத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். என் வாழ்வில் சாஹிலுக்கு எப்பொழுதுமே இடம் உண்டு. திருமண வாழ்வில் அமைதியும், சந்தோஷமும் இல்லை. அதனால்தான் பிரிவது என்று முடிவு செய்துவிட்டோம்.
இவர்களின் பிரிவால் இரண்டு குடும்பத்தினரும் வேதனை அடைந்துள்ளனர். இது கடினமான முடிவு என்றார்.
கணவரை பிரிந்தது குறித்து க்ரித்தி கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார். அந்த போஸ்ட்டில் அவர் கூறியதாவது; “நானும், கணவரும் பிரிய முடிவு செய்திருக்கிறோம். நாங்கள் பேப்பரில் அல்ல வாழ்க்கையில் பிரிகிறோம். பிரிவது என்று முடிவு செய்தது மிகவும் கடினமாக இருக்கிறது. இது எளிது இல்லை. ஒருவருடன் இனி சேர்ந்து இருக்க முடியாது என்பது வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, க்ரித்தியும் சாஹிலும் பிரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. அதை அவரும் கூறவில்லை. க்ரித்தி, சாஹிலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் சந்தோஷமாக இருப்பதாக நினைத்தார்கள். ஆனால், ரசிகர்கள் சந்தோஷப்பட்ட வேகத்தில் பிரிவை அறிவித்தார் க்ரித்தி என்பது குறிப்பிடத்தக்கது.

