Theme Check

தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது ஏன்? - கைதான நபர் நியாயமான வாக்குமூலம் !!

தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது ஏன்? - கைதான நபர் நியாயமான வாக்குமூலம் !!

தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது ஏன்? - கைதான நபர் நியாயமான வாக்குமூலம் !!
X

தேமுதிக அலுவலகத்தின் முன்பு இருந்த தண்ணீர் பந்தலுக்கு ஏன் தீ வைத்து கொளுத்தினேன் என ராமு பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேமுதிக அலுவலகம் உள்ளது. அங்கு எப்போது காவலாளி பணியில் இருப்பார். மற்றும் கட்சி பிரமுகர்களும் அப்பகுதியில் முகாமிட்டிருப்பர். தற்போது கோடை காலம் என்பதால் அக்கட்சியின் சார்பில் கட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீர், மோர் பந்தல் கடந்த 4 ஆம் தேதி திறக்கப்பட்டது.

அப்பகுதியில் பேருந்து நிறுத்தமும் இருப்பதால் பலரும் நீர், மோர் பந்தலை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த பந்தல் தீப்பற்றி எரிந்து நாசமானது.

df
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமு என்பவர், தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே யோசிக்க வைத்தது.

அதாவது, தண்ணீர் இல்லாததால் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ராமுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


newstm.in

Next Story
Share it