முதல்வர் காலில் விழுந்தது ஏன்..? - கலெக்டர் விளக்கம்..!
முதல்வர் காலில் விழுந்தது ஏன்..? - கலெக்டர் விளக்கம்..!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 20ம் தேதி, சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வளாகங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார்.
அப்போது, சித்திப்பேட்டை கலெக்டர் பி.வெங்கட்ராம ரெட்டி, முதல்வர் சந்திரசேகர ராவின் காலைத் தொட்டு வணங்கினார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வலைதளங்களில் வைரலானது.
அத்துடன், தலைமைச் செயலர் சோமேஷ் குமார் உள்ளிட்ட பல மூத்த அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி முதல்வரின் கால்களைத் தொட்டு வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக முதல்வரின் ஆசியை பெற்றேன். முதல்வர் எனக்கு ஒரு தந்தை போன்றவர், நல்ல நிகழ்வுகளின்போது பெரியவர்களின் ஆசீர்வாதங்களை பெறுவது தெலுங்கானாவின் பாரம்பரியம். தந்தையர் தினத்தில் அவரின் ஆசியை பெற்றது மகிழ்ச்சி" என்று கூறினார்.
Tags:
Next Story

