பிரபல ரவுடி நீராவி முருகன் எதற்காக சுடப்பட்டார்.! ஐஜி பரபரப்பு தகவல்...
பிரபல ரவுடி நீராவி முருகன் எதற்காக சுடப்பட்டார்.! ஐஜி பரபரப்பு தகவல்...

பிரபல ரவுடியான நீராவி முருகன் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.இவரும், கூட்டாளியான பவானி ஈஸ்வரன் உள்ளிட்ட கும்பல் ஈரோடு மாவட்டம் பவானி போலீஸ் சரகத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீராவி முருகன் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நீராவி முருகன் நேற்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து தென்மண்டல ஐஜி அன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

நெல்லையில் ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர் தொடர்பாக களக்காடு போலீஸ் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவுடி நீராவி முருகன் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைது செய்ய முயன்றபோது நீராவி முருகன் போலீசாரை தாக்கினார். இதனால், தற்காப்புக்காகவே நீராவி முருகன் சுடப்பட்டார்’ என்றார். நீராவி முருகனை கைது செய்யமுயன்றபோது அவர் அரிவாளால் வெட்டியதில் 4 போலீசாருக்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

