Theme Check

ஒரு தலை காதலால் நடந்த கொடூரம்..!! சிறுமியின் தலையை பிடித்து சுவற்றில் மோதி.....

ஒரு தலை காதலால் நடந்த கொடூரம்..!! சிறுமியின் தலையை பிடித்து சுவற்றில் மோதி.....

ஒரு தலை காதலால் நடந்த கொடூரம்..!! சிறுமியின் தலையை பிடித்து சுவற்றில் மோதி.....
X

புதுச்சேரி, வம்பா கீரப்பாளையம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் முகேஷ் (22) சட்டக்கல்லூரி மாணவரான முகேஷ், திப்ராயப்பேட்டையைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுமி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு கூறி, சிறுமிக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், அவரை சிறுமி தவிர்த்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வம்பா கீரப்பாளையம் - செஞ்சி சாலை சந்திப்பில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு நகல் எடுக்க சிறுமி சென்றுள்ளார்.

பின் தொடர்ந்து சென்ற முகேஷ் சிறுமியை வழிமறித்து, “என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்?” எனக் கேட்டு கைகளால் தாக்கியுள்ளார்.

மேலும், சிறுமியின் தலையை பிடித்து அருகில் உள்ள சுவற்றில் மோதி, “உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்” என கூறிக் கொண்டே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றுள்ளார்.

பயத்தில் சிறுமி அலறியதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். முகேஷ் கத்தியை வீசி விட்டு, தப்பிச் சென்றார். சிறுமி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமி அளித்த புகாரின் பேரில், முகேஷ் மீது, மானபங்கம் செய்தல், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட முகேஷ், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story
Share it