Theme Check

எதற்கு நன்றி சொல்ல வேண்டும் பிரதமர் அவர்களே ? - கேட்கிறார் மதுரை எம்பி

X

‘அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாய் கொடுத்தற்காக மோடிக்கு நன்றி சொல்லி போஸ்டர் ஒட்ட வேண்டும்’ என, அஞ்சல் அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேன் தனது ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர் அவர்களே..! இப்படி ஒரு போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று அஞ்சல் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வந்திருக்கிறது. எதற்காம்..? எல்லோருக்கும் இலவசமாய் தடுப்பூசி தந்ததற்காகவா..?

மூன்று விலைகள் வைத்து மாநிலங்களை அல்லாட விட்டதற்கா..? ஒன்றிய அரசு ஒன்று இருக்கும்போது ஒவ்வொரு நாடாய் மாநில அரசுகளை தடுப்பூசி கிடைக்குமா என்று அலைய விட்டதற்கா..? கடும் எதிர்ப்பு வந்த பிறகு தடுப்பூசி கொள்கையை திரும்பப் பெற்று அப்போதும் கூட 25 சதவீதத்தை தனியாருக்கு ஒதுக்கிய கார்ப்பரேட் பாசத்திற்காகவா..?

இந்தியாவில் உற்பத்தியான தடுப்பூசிகளை வெளி நாட்டிற்கு அனுப்பி விட்டு இந்திய மக்களை தடுப்பூசி கிடைக்காமல் அலைமோத விட்டதற்கா..? தடுப்பூசி பற்றாக்குறை வந்தவுடன் எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதைக்கூட மக்களுக்கு சொல்லக் கூடாது என மாநில அரசுகளுக்கு வாய்ப்பூட்டு போட்டதற்காகவா..? உலகில் தடுப்பூசி போட்டவர்கள் விகிதத்தில் 10 வது இடத்துக்கும் கீழே இந்தியா இருப்பதற்கா..?

இப்படி எத்தனையோ காரணங்களுக்காக மக்கள் மத்திய அரசை கடுமையாக வசையாடிக் கொண்டிருக்கும்போது, அரசாங்க செலவில், அரசு அலுவலகத்தின் முன்னாள் அரசு அதிகாரியே போஸ்டர் ஒட்ட வேண்டுமாம். அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஒரு வாக்கியம் விடுபட்டுப் போயுள்ளது.

‘மூன்றாவது அலை வருவதற்குள் இந்த போஸ்டரை ஒட்ட வேண்டும்’ என்ற வாக்கியத்தை அடுத்த சுற்றறிக்கையில் சேர்த்துக்கொள்ளவும்" என கேள்வி எழுப்பி, கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it