இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஏன் இப்படி? - பெண்ணுக்கு நடந்த விபரீதம் !!
இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஏன் இப்படி? - பெண்ணுக்கு நடந்த விபரீதம் !!

இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. தொடக்கத்தில் சிறிய தொகை பெறும் அவர்கள் நாளடைவில் அடுத்தடுத்து பெரும் தொகையை வாங்கி செலவு செய்கின்றனர். அதன்பின்னர் அவர்கள் சிக்கலில் சிக்கிக்கொண்டு தவிக்கும் சூழல் ஏற்படுகிறது.
தற்போது அவ்வாறு ஒரு பெண்ணுக்கு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 40 வயது பெண் சென்போன் செயலி மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் கடன் வாங்கியுள்ளார். கடன் பெறுவதற்கு முன்பாக அந்த செயலில் இருந்த எண்ணில் பேசியபோது எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கடன் பெறலாம். வட்டி குறைவுதான் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பி அவர் குடும்ப தேவைக்காக ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். அசல் மற்றும் வட்டியை தொடர்ச்சியாக கட்டி வந்துள்ளார். ஆனால் சரியாக பணம் கட்டவில்லை எனக்கூறி தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் திடீரென அந்த பெண்ணிடம் பணத்தை கேட்டு ஆபாசமான முறையில் மிரட்டத்தொடங்கினர். அதாவது அவரது படத்தை இணையதளங்களில் உள்ள ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து அவருடைய உறவினர்களுக்கு அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், இது குறித்து சிவகங்கை எஸ்பி செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.

அதன்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் மெசேஜ் அனுப்பி வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது, ஆபாச படங்களுடன் இணைத்து மிரட்டுவது என பெண்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருவதால், சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in

