மேற்கு வங்கத்திற்கு ஏன் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு ? - ஒரே காரணம் தான் !!
மேற்கு வங்கத்திற்கு ஏன் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு ? - ஒரே காரணம் தான் !!

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலத்திற்கு தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் மேற்குவங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களிடம், ஏன் மேற்குவங்கத்திற்கு மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு ஒரு காரணத்தை கூறலாம். தமிழகம் போன்ற களம் அல்ல மேற்குவங்கம். சாதாரண நாட்களிலேயே வன்முறைகள் தலைவரித்தாடும் என்றப்போது, தேர்தல் நாட்களில் அதனை கூறவே வேண்டாம். தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை மோதிக்கொண்டு சர்வசாதாரணமாக கொலைகளும் அரங்கேறும். இவ்வளவும் அரசியல் துணையோடு அரங்கேறும் என்பது தான் கூடுதல் தகவல்.

தேர்தல் பணிகளை கடந்த ஆண்டே மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அன்றுமுதலே வன்முறைகளும் கூடவே வளர தொடங்கிவிட்டது. பாஜக நிர்வாகிகளை மம்தா கட்சியினர் கொலை செய்கின்றனர் என பாஜக தரப்பு கூறி வருகிறது. அதேபோன்று மம்தா கட்சியினர் கூறி வருகின்றனர். இவ்வாறு அங்கும் சர்வ சாதாரணமாக கூட கைகளில் துப்பாக்கியோடு பிரச்சாரங்களில் ஈடுபடுவர்.
இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் வன்முறை நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தலை மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளதாக கூறியுள்ளது, ஆனால் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மம்தா கூறுகையில், பிற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் மோடியும் அமித் ஷாவும் விரிவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாகவே இவ்வாறு தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநில தேர்தல் அட்டவணை பின்வருமாறு:-
மேற்கு வங்ககத்தில் 8 கட்டங்களாக தேர்தல்
முதற்கட்ட தேர்தல் ( 30 தொகுதிகள்) :- மார்ச் 27
இராண்டாம் கட்ட தேர்தல் (30 தொகுதிகள்) :- ஏப்ரல் 1
மூன்றாம் கட்ட தேர்தல் ( 31 தொகுதிகள்) :- ஏப்ரல் 6
நான்காம் கட்ட தேர்தல் (44 தொகுதிகள்) :- ஏப்ரல் 10
ஐந்தாம் கட்ட தேர்தல் ( 45 தொகுதிகள்) :- ஏப்ரல் 17
ஆறாம் கட்ட தேர்தல் ( 43 தொகுதிகள்) :- ஏப்ரல் 22
ஏழாம் கட்ட தேர்தல் (36 தொகுதிகள்) :- ஏப்ரல் 26
எட்டாம் கட்ட தேர்தல் (35 தொகுதிகள்) : ஏப்ரல் 29
newstm.in

