Theme Check

கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி அதிரடி கைது!!

கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி அதிரடி கைது!!

கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி அதிரடி கைது!!
X

கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் மாலிக் - ரேஷ்மா பீவி தம்பதி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவிற்கு வந்து வேலைபார்த்து வந்தனர்.

இந்நிலையில், கணவரை காணவில்லை என ரேஷ்மா பீவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில் புகார் கொடுத்த மனைவி ரேஷ்மா பீவியிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

death

அதில், கணவர் மன்சூர் மாலிக்கை நண்பருடன் சேர்ந்து அவரது மனைவி கொலை செய்து வீட்டிலேயே புதைத்து காணவில்லை என நாடகம் ஆடியதை அறிந்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

சில நாட்களாகக் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மனைவி ரேஷ்மா பீவியை, மன்சூர் மாலிக் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கணவனை அடித்து கொலை செய்து வீட்டிலேயே புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

Next Story
Share it