Theme Check

பணம் திருடியதை தூக்கத்தில் உளறிய மனைவி: பிளான் பண்ணி சிறையில் அடைத்த கணவன் !

பணம் திருடியதை தூக்கத்தில் உளறிய மனைவி: பிளான் பண்ணி சிறையில் அடைத்த கணவன் !

பணம் திருடியதை தூக்கத்தில் உளறிய மனைவி: பிளான் பண்ணி சிறையில் அடைத்த கணவன் !
X

சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி, குறட்டை விடுவது, உளறுவது போன்ற குறைபாடுகள் இருக்கும். இதில் மிகவும் ஆபத்தானது என்னவென்றால் தூக்கத்தில் உளறுவது தான். ஏனெனில் தூக்கத்தில் உளறும்போது பெரும்பாலும் உண்மையை கூறிவிடுவர் என்பதாலேயே ஆபத்தானதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் தான் செய்த குற்றத்தை தூக்கத்தில் உளறி சிக்கியுள்ளார் பெண் ஒருவர்.

rooth

வீல் சேர் உதவியோடு இயங்கி வரும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு உதவியாளராக ரூத் ஃபோர்ட் என்ற பெண் பணியாற்றி வந்தார். பணியில் இருந்தபோது தனது எஜமானிடமிருந்து பணத்தை திருடி உள்ளார் ரூத். அதனை நல்ல செலவு செய்து வந்த நிலையில் குடும்பத்தில் கூட யாரிடமும் அந்த தவறை கூறாமல் ரகசியமாக வைத்திருந்தார்.

ஆனால், அதைதான் பணிப்பெண் ரூத் தூக்கத்தில் உளறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ந்த அந்த பணிப்பெண்ணின் கணவர் ஆண்டனி போலீசார் புகார் செய்துள்ளார். தான் வேலை செய்யும் இடத்திலிருந்து இந்திய ரூபாய் மதிப்பில் 7,31,032 ரூபாயை ரூத் திருடியுள்ளார். இதனை தூக்கத்தில் உளறிய போது அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார் அவர் 61 வயது கணவர் ஆண்டனி.

rooth

அவரது குற்ற செயலுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கில் போலீசில் புகார் கொடுத்ததாகவும் ஆண்டனி தெரிவித்துள்ளார். தனது மனைவி அதிகளவில் பணம் செலவிட்டு வருவதை கண்டு தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரூத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 16 மாத காலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டனி ( 61 ) மற்றும் ரூத் ஃபோர்ட் (47) தம்பதியர் கடந்த 2008ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டு ஒன்றாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it