Theme Check

மனைவி கொடுமை தாங்க முடியல... என்ன ஜெயில அடைங்கனு போலீசாரிடம் கெஞ்சிய இளைஞர் !!

மனைவி கொடுமை தாங்க முடியல... என்ன ஜெயில அடைங்கனு போலீசாரிடம் கெஞ்சிய இளைஞர் !!

மனைவி கொடுமை தாங்க முடியல... என்ன ஜெயில அடைங்கனு போலீசாரிடம் கெஞ்சிய இளைஞர் !!
X

இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் குற்றச்செயல்களும், இதனால் சிறைக்கு செல்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் பெரும்பாலானோர் சிறைக்கு செல்ல விருப்பம் இல்லாமல் தப்பியோடுவர். ஆனால், இதற்கு எல்லாம் விதிவிலக்காக இங்கு ஒருவர் உள்ளார்.

italy mask dsaas

மனைவியின் கொடுமை தாங்காமல் தன்னை சிறையில் அடைத்துவிடுங்கள் என இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் மன்றாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரத்தை ஒட்டி கைடோனியா மாண்டெசெலியோ என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் இளைஞர் ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளார். இந்தக் குற்றத்திற்காக அவரை போலீசார் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர். அவர் பல மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்து வருகிறார். இவரின் தண்டனைக் காலம் முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் அந்த இளைஞர் வீட்டிலிருந்து தப்பித்து காவல்நிலையம் வந்துள்ளார்.

italy mask dsaas

அப்போது, போலீசாரிடம் அந்நபர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிக்குகம் வகையில் இருந்தது. அதாவது, இனிமேல் என்னால் வீட்டில் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். வீட்டில் என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு நரகம் போலாகிவிட்டது. தயவுசெய்து என்னைச் சிறையில் அடைத்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த குற்றத்திற்காக போலீசார் அவரை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி, அவரது கோரிக்கையை ஏற்று சிறையில் அடைத்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it