Theme Check

மனைவி, குழந்தைகள் கொன்று புதைப்பு.. கள்ளக்காதலியுடன் சிக்கிய இளைஞர் !!

மனைவி, குழந்தைகள் கொன்று புதைப்பு.. கள்ளக்காதலியுடன் சிக்கிய இளைஞர் !!

மனைவி, குழந்தைகள் கொன்று புதைப்பு.. கள்ளக்காதலியுடன் சிக்கிய இளைஞர் !!
X

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் சிபயனா புஸுர்க் என்ற கிராமத்தில் ராகேஷ்- ரத்னேஷ் தம்பதியர் வசித்து வந்தனர். இவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ராகேஷுக்கு அதே பகுதியில் வசிக்கும் பெண் போலீஸ் ஒருவருடன் கள்ள உறவு ஏற்பட்டது.

கணவரின் இந்த கள்ளக்காதலால் வீட்டி சண்டை ஏற்பட்டு கணவன்- மனைவி இடையே தகராறு தொடர்ந்து. ராகேஷ் தன்னுடைய மனைவியை விட்டு விட்டு அந்த பெண் போலீசுடன் வாழ விரும்பினார். ஆனால் அவரது மனைவி கடுமையாக எதிர்த்து சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ் இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட திட்டமிட்டார். இதற்காக கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும், தனது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்று அவர்களின் உடல்களை அவரது வீட்டிற்குள் புதைத்தார்.

murder

பிறகு மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று போலீசில் புகார் தந்தார். ஆனால் ரத்னேஷ் குடும்பத்தினர், ராகேஷ் மீது சந்தேகம் இருப்பதாக மற்றொரு புகார் கொடுத்தனர். 2018ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்தது. அதன்பின்னர் ராகேஷ் அவரது கள்ளக்காதலி தலைமறைவாகினர். அவர்கள் இக்குற்றத்தில் இருந்து தப்பிக்க சினிமா காட்சி ஒன்று ஒரு சம்பவத்தை அரங்கேற்றினர்.

அதாவது, அவர்கள் இருவரும் டெல்லி அருகே தங்கியிருந்தப்போது, ஒருவரின் தலை துண்டித்து, அவரது கைகளை வெட்டி கொலை செய்தனர். பின்ன அந்நபரின் தலையை எரித்தனர். பின்னர் அந்த சடலத்துக்கு ராகேஷ் உடையில் அணிந்து கொண்டார், மேலும் இது அவரது உடல் என்பதை நிரூபிக்க முயன்ற அடையாள அட்டைகளையும் உடலில் விட்டுவிட்டார்.

murder

ஆனால், அந்த உடலுக்கு டிஎன்ஏ சோதனை செய்தப்போது இந்த சடலம் ராகேஷ் அல்ல என்று போலீசார் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் உண்மை அம்பலமானதால் ராகேஷ் மற்றும் அவரது கள்ளக்காதலியை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர். ராகேஷின் வீட்டிலிருந்து அவரது மனைவி, பிள்ளைகளின் உடலை எலும்பு கூடாக தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it