Theme Check

தனது தாய் வீட்டுக்கு வர கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலை!!

தனது தாய் வீட்டுக்கு வர கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலை!!

தனது தாய் வீட்டுக்கு வர கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலை!!
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தனது தாய் வீட்டிற்கு கணவன் வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் - கவிதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர் . கவிதா வீட்டினர் மீது பிரபாகரனுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என தெரிகிறது.

இந்நிலையில் கவிதாவின் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு கவிதாவும், பிரபாகரனும் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து தனது தாய் வீட்டில் தங்கி இருந்து விட்டு செல்லலாம் என்று கவிதா சொல்லியிருக்கிறார்.

suicide

ஆனால் அதற்கு பிரபாகரன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். கவிதான் பெற்றோர் இருவரும் வருவார்கள் என்று காத்திருந்தனர். இதனால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்தார்.

மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனாலும் கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it