மனைவி தற்கொலை.. பிரபல இளம் நடிகர் அதிரடி கைது !!
மனைவி தற்கொலை.. பிரபல இளம் நடிகர் அதிரடி கைது !!

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் உன்னி தேவ். இவர் மறைந்த பிரபல வில்லன் நடிகரான ராஜன் தேவின் மகன் ஆவார். இவருக்கும் ப்ரியங்கா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த இருவருக்கும் ஆரம்பம் முதலெ பிரச்னை உருவானது.
தகராறு முற்றிப்போன நேரங்களில் ப்ரியங்காவை நடிகர் உன்னி தேவ் பலமுறை அடித்துள்ளாதாக கூறப்படுகிறது. கணவன் செய்யும் கொடுமையால் தாங்க முடியாத ப்ரியங்கா கொச்சி போலீசாரிடம் இதுகுறித்து முன்பு புகார் அளித்தார்.

இந்நிலையில் புகார் அளித்த மறுநாளே ப்ரியங்கா அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ப்ரியங்காவின் மரணம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனே ப்ரியங்காவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடலை அடையாளம் காட்டினர். அதை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால் தான் எங்கள் மகள் ப்ரியங்கா இந்த முடிவை எடுத்துள்ளார். அதனால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.‘

இந்நிலையில், நடிகர் உன்னி தேவ்வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி தற்கொலை வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

